போதையில் கிண்டலடித்த கணவர்: முகத்தில் சுடுநீர் ஊற்றிய மனைவி

1 mins read

சென்னை: கறுப்பாக இருப்பதாக கிண்டல் செய்த கணவர் மதுபோதையில் இருந்த வேளையில், அவரது முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த 36 வயதான சியாம்வெஸ்லி, தன் மனைவி கிறிஸ்டி (34 வயது) என்பவருடன் வசித்து வருகிறார். திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வெஸ்லி மதுப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். நேற்று முனுதினம் மது அருந்திய பிறகு வீடு திரும்பிய அவர், வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது மனைவி கிறிஸ்டி கறுப்பாக இருப்பதாகவும் அழகாக இல்லை என்றும் அவர் தொடர்ந்து கிண்டல் செய்ய, கடும் கோபமடைந்த கிறிஸ்டி சுடுதண்ணீரை எடுத்து வந்து கணவரின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் முகம் வெந்து போனதால் வெஸ்லி அலறித்துடிக்க, அண்டை வீட்டார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.