தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சர்ச்சை: காலிஸ்தான் தலைவருடன் நவ்ஜோத் சிங் சித்து

2 mins read
56218f37-c7da-4ca0-9408-2dc43b5a7850
-

புதுடெல்லி: பாகிஸ்தானில் நடை பெற்ற விழாவின்போது காலிஸ் தான் தலைவர் கோபால் சிங் சாவ்லாவுடன் நவ்ஜோத் சிங் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் மீண்டும் சர்ச்சை யில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானின் கர்தார்பூரில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் இயற்கை எய்திய இடத்தில் கட்டப்பட்ட சீக்கிய கோயிலான தர்பார் சாகிப் குருத்வாரா கட்டப்பட்டு உள்ளது. இந்த நகரை இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள தேரா பாபா நானக் நகருடன் இணைக்கும் விதமாக 4.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே இணைப்புச் சாலை அமைக்கப் படுகிறது. இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள வசதியாக இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் கர்தார்பூர் நகரில் நடைபெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியாவின் மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி மற்றும் பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் பங்கேற் றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைப் பாராட்டிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தானின் தலைவரான கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சித்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாவ்லா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந் துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற விழாவில் காலிஸ்தான் தலைவர் கோபால் சிங் சாவ்லாவுடன் (வலது) புகைப்படம் எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நவ்ஜோத் சிங் சித்து (நடுவில்). படம்: இந்திய ஊடகம்