ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ 'ஹைசிஸ்' எனும் அதிநவீன செயற்கைகோளைத் தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளைக் கடந்த சில மாதங்களாக இஸ்ரோ நிறுவனம் செய்து வந்தது.
இதற்கிடையே, அமெரிக்கா தனது 23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை நாடியது. அதுபோல ஆஸ்திரே லியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, ஹாலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ விடம் உதவி கேட்டன. இதை அடுத்து, எட்டு வெளிநாடுகளின் 30 செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் 'ஹைசிஸ்' செயற் கைக் கோளையும் சேர்த்து மொத்தம் 31 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் வெற்றிகரமாக நேற்று நிலைநிறுத்தியது இஸ்ரோ.
செயற்கைக்கோள்களை ஏந்திக்கொண்டு விண்ணில் பாய்ந்து செல்லும் ராக்கெட்டைக் கண்டு மகிழும் சிறுவர்கள். படம்: ஏஎஃப்பி

