இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கர்கோன் பகுதியில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அதில் 22 பேர் மாண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் பல பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்தில் கிட்டத்தட்ட 50 பேர் இருந்ததாகவும் அது இந்தூருக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
மீட்புப்பணிகளுக்கு அவ்வட்டார மக்களும் உதவி வருகின்றனர்.
விபத்தில் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு தரப்படும் என்று மத்தியப் பிரதேச அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடுமையாகக் காயமடைந்தவர்களுக்கும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கமும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.