தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

22 பாம்புகளுடன் சென்னை விமானத்தில் சிக்கிய பெண்

1 mins read
0c8ff80a-117e-4276-b9c7-78f0318480c6
படம்: பிக்ஸாபே -

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 22 பாம்புகளைக் கடத்தி வந்ததுள்ளார் ஒரு பெண்.

ஏர் எசியா விமானம் மூலம் அந்தப் பெண் ஏப்ரல் 28 தேதி புறப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்தவுடன் அதிகாரிகள் அப்பெண்ணின் பைகளை சோதனை செய்துள்ளனர்.

சோதனையில் அவர் பையில் இருந்த பாம்புகள் அடையாளம் காணப்பட்டது. பச்சோந்தி ஒன்றும் அவரின் பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

பாம்புகள் ஒரு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தது.

கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு மலைப்பாம்பு, 3 நட்சத்திர ஆமைகள், 8 பாம்புகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்