மம்தா: பாஜக இல்லா இந்தியா ஒரு சிறந்த நாடாகும்

மம்தா: பாஜக இல்லா இந்தியா ஒரு சிறந்த நாடாகும்

1 mins read
ef19c2eb-a4e6-4104-aceb-3e7e227a3db7
-

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் பலராம்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி உரையாற்றினார். "மாநில ஆளுநர் அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்திலும் தனது ஆதரவாளர் களை பாரதிய ஜனதா கட்சி பணியில் நியமித்துள்ளது. எனவே இந்தியாவைவிட்டு பாஜக வெளியேற வேண்டும். பாஜக இல்லாத இந்தியா சிறப்பாக இருக்கும். "கடந்த நாடாளுமன்ற தேர் தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த தேர்தலில் அந்தக் கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. "மத்தியப் பிரதேசத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதவியுடன் மேற்கு வங்காளத்தில் பாஜக தடம் பதிக்க முயற்சி செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பாஜகவுக்காக தங்களது நிறத்தை மாற்றி வருகின்றனர். "வெளியில் பாஜகவினராகவும் உள்ளே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினராகவும் அவர்கள் இருக்கிறார்கள். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கோல்கத் தாவில் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ள பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகள் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளன. அந்தப் பேரணி யில் எதிர்கட்சி தலைவர்கள் கலந்துகொள்வதாக உறுதி அளித்துள்ளனர்," என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.