100 டன் அரிசி தரும் அதிமுக

100 டன் அரிசி தரும் அதிமுக

1 mins read
edfaf72f-95ca-4be7-919c-c87270c3dfdb
-

சென்னை: கஜா சூறாவளிப் புயலால் தங்களது பல்லாண்டு கால வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு விநியோ கிப்பதற்காக சென்னையில் இருந்து அதிமுக சார்பில் ஐந்து லாரிகள் மூலம் 100 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பலதரப்பின ரும் உதவிக்கரம் நீட்டிவரும் நிலையில் அவசர உதவியாக ரூ.10 கோடி வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜ யன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நிவாரணப் பொருட்களும் ஆறு மருத்துவக் குழுவினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேரள மின்சார வாரியத்தைச் சேர்ந்த 72 ஊழியர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பரவிவரும் நோய்த் தொற்றில் இருந்து மக்கள் முழுமையாக குணமடையும் வரை மருத்துவ சேவை தொடரும் எனச் சுகா தாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கஜா புயல் ஆய்வு குறித்து செய்தியாளர் களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெரும்பாலான மக்கள் விரைவில் மின்சார வசதி வழங்க வேண்டும் என்றனர். ஒரு சில இடங்களில் குடிநீர் வசதிக் கான கோரிக்கைகளும் விடுக்கப் பட்டன. மின்சார ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மின் கம்பங்களை ஊன்றி வருகின்றனர். 24,000 பேர் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். நான்கு அல்லது ஐந்து நாட்களில் அனைத்துப் பகுதி களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்," என்றார்.