பணத்தால் தடைப்பட்ட மருத்துவப் படிப்பு; தள்ளுவண்டியில் உணவு விற்கும் மாணவி

பணத்தால் தடைப்பட்ட மருத்துவப் படிப்பு; தள்ளுவண்டியில் உணவு விற்கும் மாணவி

2 mins read
d6977155-4b0e-439d-b0d9-b4ce6adb8153
-

ஆலந்தூர்: நாம் பட்ட கஷ் டத்தை ஒருநாளும் நம் பிள்ளை கள் படக்கூடாது. எப்படியாவது அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதான் பெற்றோர் பலரும் நினைப்பார்கள். இப்படித்தான் ஒரு மாணவி யின் பெற்றோரும் தனது மகளை மருத்துவராக்க பெரும் சிரமப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களால் தங் களது மகளின் மருத்துவப் படிப்புக்குத் தேவையான பணத்தை புரட்ட முடியாததால் மாணவியின் மருத்துவப் படிப்பு கனவு நனவாகாமல் பாதியி லேயே கலைந்துவிட்டது. பணமின்றி படிப்பை பாதியில் நிறுத்திய சென்னை மாணவி, பெற்றோருடன் பழவந்தாங்கல் பகுதியில் இப்போது தள்ளுவண்டியில் உணவுக் கடை நடத்தி வருகிறார்.

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு கிருபா, கௌசல்யா, கௌரி என மூன்று மகள்கள். இதில் கிருபா சிறு வயதில் இருந்தே டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வளர்ந்தவர். 'பிளஸ் 2' தேர்வில் 980 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் இவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மருத்துவம் பயிலும் ஆசையுடன் புனேயில் உள்ள கல்லூரியில் ஒரு ஆண்டு படிப்பை நிறைவு செய்துவிட்டு அங்கிருந்து பிலிப்பீன்ஸ் நாட்டிற்குச் சென்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்தார்.

அங்கு முதலாம் ஆண்டு படிக்க மட்டுமே ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளார். தொடர்ந்து அடுத் தடுத்த ஆண்டுக்கான கட்ட ணத்தை செலுத்தமுடியாத சூழ் நிலையில் கிருபா தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென் னைக்குத் திரும்பினார். தற்போது பழனிசாமி வீதிவீதி யாக தேநீர் விற்று வருகிறார். இதுகுறித்து கிருபா செய்தியாளர் களிடம் கூறுகையில், "டாக்டருக் குப் படிக்க ஆசை இருந்தாலும் மேற்கொண்டு பணம் கட்டமுடியாத தால் பெற்றோருடன் தள்ளுவண்டி யில் டிபன் கடை நடத்துகிறேன். மேற்கொண்டு படிக்க ஆசை உள்ளது. ஆனால் பணம் இல்லை. ஒருநாள் என் ஆசை நிறைவேறும்," என்கிறார் மாணவி கிருபா.

தள்ளுவண்டியில் உணவு விற்கும் மருத்துவ மாணவி. படம்: ஊடகம்