ஏழு பேர் விடுதலை: திரையுலகக் கலைஞர்கள் ஆளுநருக்குக் கோரிக்கை

ஏழு பேர் விடுதலை: திரையுலகக் கலைஞர்கள் ஆளுநருக்குக் கோரிக்கை

2 mins read

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் வலியுறுத்தி உள் ளனர். இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், தமிழ் திரையுலகத்தினரும் இதற்காகக் குரல் கொடுத்துள்ளனர். இதை திரை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் பா. ரஞ்சித், ராம் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட் டுள்ளனர்.

"இது வெறும் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மனித உரிமைகளைக் கருத்தில் கொள்வதற்கான கோரிக்கை. தயவு செய்து இரக்கம் கொள்ளுங் கள் ஆளுநரே. தயவு செய்து செயல்படுங்கள்," என்று விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் தமது பதிவில், "அன்புக்குரிய ஆளுநரே சிறைத் தண்டனை மட்டுமே தீர்வு அல்ல, நியாயத்தின்படி செயல் படுங்கள்," எனக் குறிப்பிட்டுள்ளார். "திறக்கட்டும் கதவுகள். ஆளுநரைச் சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம்," என இயக்குநர் ராம் பதிவிட்டுள்ளார். "பொறுத்தது போதும்.. அவர் களை வாழ விடுங்கள்... இது அவர்களை சேரும்வரை பகிருங் கள்," என்று பதிவிட்டுள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ். இந்தப் பதிவுகளுக்கான பின் னூட்டங்களில் திரை ரசிகர்களும் இந்தக் கோரிக்கைக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஏழு பேரும் இத்தனை ஆண்டு கள் சிறைவாசம் அனுபவித்ததே போதுமானது என ரசிகர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தால் தமிழக அரசு ஏழு பேரை விடுதலை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.