புதுக்கோட்டை: மேகதாது அணை தொடர்பான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது வருத்தம் அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை என்றார். இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பயன் இல்லை: சொல்கிறார் சரத் குமார்
1 mins read

