துப்பாக்கிச்சூடு: போலிஸ் மீது வழக்குப் பதிவு

துப்பாக்கிச்சூடு: போலிஸ் மீது வழக்குப் பதிவு

1 mins read

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருப் பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 7 பிரவுகளின் கீழ் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதன் உச்சகட்டமாக கடந்த மே மாதம் 22ஆம் தேதியன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற னர்.

அச்சமயம் திடீரென வன்முறை வெடித்ததை அடுத்து நிலை மையைக் கட்டுக்குள் கொண்டுவர போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி யில் உள்ள பல்வேறு காவல் நிலை யங்களில் 243 வழக்குகள் பதிவா கின. சிலரைப் போலிசார் கைது செய்த நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பட்டது. போராட்டம் தொடர்பாகவும், துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் இரு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தினர். துப் பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் சிபிசிஐடி விசா ரணை நடத்தினால் அது நியாய மான முறையில் நடைபெறாது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண் டும் என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.