கோமாரி நோய் பாதிப்பு; மாட்டுச் சந்தைகள் மூடல்

1 mins read

திருப்பூர்: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் எனப்படும் வாய்ச் சப்பை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூரில் உள்ள மாட்டுச் சந்தைகள் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 10 நாட்களில் நூற்றுக்கணக் கான கறவை மாடுகள் இந்த நோயால் இறந்துள்ளன. ஈரோட்டில் உள்ள கால்நடைகளை இந்நோய் அதிகம் தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து சுற்று வட்டார மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை கூட்டமைப்பு சங்கத்தின் செயலாளர் நல்ல சாமி கூறியபோது, "கோமாரி வாய்ச்சப்பை நோயால் கால்நடை வியா பாரம் கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த வியாபாரிகள் தமிழ கத்தில் உள்ள மாட்டுச் சந்தைகளில்தான் மாடுகளை வாங்குகிறார்கள்; விற்கிறார் கள். இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகி றோம்," என்று கூறினார்.