சென்னை: ஏழை எளிய மக்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை களையும் பெற்று பயன்பெறும் வகையில் ஏற்கெனவே அவர் களுக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட் சம் மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக அதி கரித்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட் டுள்ளார். நேற்று 1ஆம் தேதி முதல் இத்திட்டம் நடப்புக்கு வந்தது. இதன்கீழ் 1.58 கோடி குடும்பத் தினர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஈடான மருத்துவ சிகிச்சையை எந்த ஒரு கட்டணமும் இன்றி பயன்பெறலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கே. பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ கத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
"இந்தத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்குக் காப் பீட்டு அடையாள அட்டை அளிக் கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் பேர் ரூ.5,133.33 கோடி அளவுக்குப் பயன் அடைந்துள்ளனர். "இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்கவேண்டும். இத்திட்டத்தில் இணைய விரும்பு வோர் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மையத்தில் அளிக்கவேண்டும். மனுதாரர் களின் விவரங்களைப் பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

