சென்னை: குறுகிய காலத்தில் பெரிய அளவில் பணம் பார்க்கும் நோக்கத்துடன் அண்மைக் கால மாக வெளிநாட்டில் இருந்து தங் கத்தை பற்பல நூதன வழிகளில் எல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவுக்குள் கடத்திவரும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோல் ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11.16 கோடி ரொக்கப் பணம், 7 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கடத்தல் குற்றத்தில் தொடர்புடைய தென் கொரியாவைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து தொழிலதிபர்களை மத்திய வரு வாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு சிலர் விமானத்தின் மூலம் தங்கக்கட்டிகளையும் கோடிக்கணக்கிலான பணத்தையும் கடத்தி வந்து மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து பங்கிட்டுக் கொள்வதாக மத்திய வருவாய் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சம் பந்தப்பட்ட நட்சத்திர ஹோட் டலில் நேற்று முன்தினம் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தொழிலதிபர் ஒருவர் பெரிய தோல் பையுடன் கார்கள் நிறுத்துமிடம் நோக்கி விரைய, அவரைச் சுற்றி வளைத்த அதிகாரிகள் அவரது பையைச் சோதித்தபோது அதில் தங்கக்கட்டி கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் தங்கக் கட்டி களை அவர் அதே ஹோட்டலில் தங்கியிருக்கும் தென் கொரியா வைச் சேர்ந்த இருவரிடம் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வெளிநாட்டினர் இருவரும் கைதாகினர். அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் ஹாங்காங்கில் இருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த தையும் கடந்த புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஹோட்டலில் தங்கி யதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மத்திய வருவாய் அதிகாரிகள் தொழில் அதிபருக் குச் சொந்தமான பல்வேறு இடங் கள், அவருடைய ஊழியர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி அங்கும் பதுக்கி வைக்கப் பட்டிருந்த தங்கம், ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்தனர். கைதாகியுள்ள தென்கொரியர் கள் இதுபோல் பலமுறை கடத் தலில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

