சென்னை: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்கள் தற்போது கஜா புயலால் நிவாரண முகாம்களில் மீண்டும் அகதிகளாக அவதிப்பட்டு வருவதாக கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களைத் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என்றும், எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். "எனது நண்பர் சார்பில் லண்டனில் இருந்து பல பொருட்கள் வரவழைக்கப் பட்டு பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடி யுரிமை வழங்க வேண்டும். "தமிழக அரசு இப்போது மத்திய அரசின் அடிமை யாக செயல்படுகிறது," என்றார் கருணாஸ்.
அகதிகள் அவதி: கருணாஸ் கவலை
1 mins read

