மத்திய அரசின் அலட்சியப் போக்கு: ஸ்டாலின் தாக்கு

மத்திய அரசின் அலட்சியப் போக்கு: ஸ்டாலின் தாக்கு

1 mins read

சென்னை: விவசாயிகள் நிர் வாணப் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட மத்திய அரசுதான் காரணம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை யில், விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் பரிசீலிக்காமல் மத்திய அரசு அலட்சியமாக செயல்படுவதாக சாடியுள்ளார். "விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற பிடிவாதமாக மறுத்து, அறவழி அமைதிப் போராட்டங்களைத் துளியும் மதிக்காமல் பாஜக அரசு அலட் சியப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாஜக அரசின் ஆணவப் போக்கு தான் விவசாயிகளின் போராட்டத் திற்கு முழுமுதற் காரணம் என் பதில் எவ்வித சந்தேகமும் இல்லை," என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.

விவசாயிகள் நிர்வாணப் போராட்டங்களைத் தயவுசெய்து கைவிட வேண்டும் என்றும் தமி ழகத்தின் மாண்பையும் மதிப்பை யும் மேலும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் ஜனநாயக ரீதியிலான, நாகரிகமான, அறவழி, அமைதி யான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.