சேலம்: உணவுப் பாதுகாப்பு அதி காரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் பலனாக 40,000 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. கலப்பட வெல்லத்தைக் கொண்டு சென்ற 35 வாகனங் களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் சேலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் நிறைய கரும் பாலைகள் உள்ளன. இங்கு 60 விழுக்காடு சீனி கலந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக 3,500 ரூபாய்க்கு விற்ற ஒரு டன் கரும் பின் விலை 2,000 ரூபாயாகக் குறைந்து போனது. வியாபாரம் படுத்துவிட்டதால் கரும்பு விவசாயிகளுக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்துக் கலப்பட வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் சரமாரியாகப் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி கரும்பாலைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப் போது 15 ஆலைகளில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 1878 சர்க்கரை மூட்டைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். இந்த வெல்லம் முழு தரத்துடன் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்பேட்டை பகுதியில் நடைபெறும் வாராந்திர ஏலத்துக்காக 70 வாகனங்களில் வெல்லம் கொண்டு வரப்பட்டதாக வும் அவற்றுள் கலப்பட வெல்லம் இருப்பதாகவும் உணவுப் பாது காப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன் தினம் அதிகாரிகள் ஏலம் நடை பெறும் மண்டிக்குச் சென்று வாக னங்களில் கொண்டு வரப்பட்ட வெல்லச் சிப்பங்களைக் கைப் பற்றிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெல்லம் வெளிர் நிறத்தில் இருப்பதைக் கண்டனர். மேலும் தயாரிப்புத் தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படாதது, வாகனங்களில் வெல்லம் கொண்டு வருவதற்கு உரிமம் பெறாதது உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் 40,000 கிலோ வெல்லம், 35 சிறிய ரக லாரிகள் ஆகியவற்றை அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.
கலப்பட வெல்லத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள். படம்: ஊடகம்

