சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம்

1 mins read

சென்னை: போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத் திய சுமார் 7,000 வாகனங்களை ஏலம் விட்ட தன் மூலம் சென்னை மாந கராட்சி நிர்வாகம் 2 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது. சென்னையில் பல்வேறு காரணங்களால் சாலையோ ரங்களில் நிறுத்தி வைக்கப் படும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் பிறகு கண்டுகொள்வதில்லை. அந்த வாகனங்களால் பல இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்துக் காவல்துறை உதவியுடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்பட் டிருந்த 7,877 வாகனங்கள் அகற்றப்பட்டன. பின்னர் அவை ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் ரூ.2.21 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.