சென்னையிலும் நீடித்த விவசாயிகளின் போராட்டம்

சென்னையிலும் நீடித்த விவசாயிகளின் போராட்டம்

1 mins read
3512b083-c2aa-4070-819f-bcfd94ac1a0a
-

பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லியில் 2 நாட் கள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் தமிழக விவசாயி களும் பங்கேற்றனர். இந்நிலை யில் போராட்டம் முடிந்து டெல்லி யில் இருந்து ரயில் மூலம் நேற்று காலை சென்னை திரும்பிய விவசாயிகள், எழும்பூர் ரயில் நிலையத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசா யிகளில் இருவர், மண்டை ஓடு களை கழுத்தில் தொங்க விட்டி ருந்தனர். போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. படம்: தகவல் ஊடகம்