ராஜீவைக் கொல்லவில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு

ராஜீவைக் கொல்லவில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு

2 mins read

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலி கள் கொலை செய்யவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. படுகொலைச் சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு புலிகள் அமைப்பு இவ்வாறு தெரிவித்திருப்பது புதிய சர்ச்சை யையும் விவாதங்களையும் எழுப்பி உள்ளது. விடுதலைப்புலிகளின் சட்டத் துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங் கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகிய இரு வரும் வெளியிட்டுள்ள கூட்டறிக் கையில் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் பாதுகாப்புக்காக தோற்றுவிக்கப்பட்டதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. தாங்கள் ஆயுதக் குழுவோ, வன்முறைக் குழுவோ அல்ல என்றும் புலிகளின் புது அறிக்கை தெரிவிக்கிறது.

"நாங்கள் பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றைக் காண்பித்தும் கூட மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றனர் என்ற ஆதாரமற்ற, தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப் பட்டு வருகிறது. இத்தவறான பிரசாரத்தால் எம்மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். "இந்திய தலைமையைச் சீர் குலைக்கும் திட்டமோ, இந்தி யாவைத் தாக்கும் திட்டமோ ஒரு போதும் புலிகளிடம் இருந்த தில்லை. இலங்கை சாராத எந்த வொரு நபருக்கோ, தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தியதில்லை," என்று புலிகளின் அறிக்கையில் திட்ட வட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

எந்த ஒரு இந்தியத் தேசியத் தலைவருக்கும் எதிராகச் செயல் பட எண்ணியதில்லை என்றும், தொடர்ந்து அழிந்து கொண்டிருக் கும் ஈழத் தமிழர்கள் மீது அபாண்ட குற்றச்சாட்டுக்களை இனியேனும் சுமத்த வேண்டாம் என்றும் புலிகள் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ""ராஜீவ் காந்தி தமிழீழ விடுதலைப்புலிகளோடு ரகசிய உறவு பேணி வந்துள்ளார். இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் இடை யேயான உறவைத் தகர்த்தெறியும் உள்நோக்கத்தோடு இலங்கை அரசும் அந்நியச் சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சி யின் விளைவே ராஜீவ் படுகொலை என உறுதியாகக் கருதுகிறோம்," என்று புலிகள் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.