மெரீனாவில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடி தடை

மெரீனாவில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடி தடை

1 mins read

புதுடெல்லி: மெரினாவில் போராட் டம் நடத்த அனுமதிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் இது தொடர்பாக வழக்குத் தொடுத்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தரப்பு ஏமாற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தரப்பின ரும் மெரினா கடற்கரையை தங்களது போராட்டக்களமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அர சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், மக்கள் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்கள் மெரினா கடற்கரையில் அவ்வப்போது நடத்தப் படுகிறது. இத்தகைய தருணங்களில் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வதால் நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை திணறவேண்டி உள்ளது. மேலும் அவ்வப்போது சில வன்முறை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் போராட்டம் உலகளவில் பேசப்பட் டது. அதன் பின்னர் எத்தகைய போராட்டமாக இருந்தாலும் அதை மெரினாவில் நடத்த அனுமதி கோருவது அதிகரித்து விட்டது. இதையடுத்து மெரினாவில் போராட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது.