ஜெயக்குமார்: திமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை

ஜெயக்குமார்: திமுக கூட்டணி ஒரு நெல்லிக்காய் மூட்டை

1 mins read

சென்னை: திமுக கூட்டணி என்பது ஒரு நெல்லிக்காய் மூட்டை போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அந்த மூட்டையின் கயிறு அவிழத் தொடங்கி விட்டது என் றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "எல்லோரும் சிதறிவிடும் வகையில்தான் திமுக கூட்டணி உள்ளது. அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லோருக்கும் தன்மானம் இருக்கும். எனவே வைகோ, திருமாவளவன் உள்ளிட் டோர் தன்மானத்தை இழக்கமாட் டார்கள் என நம்புகிறேன்," என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு நிதி நெருக் கடி இருந்தாலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருவ தாகக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் எண்ணத்துக்கு எதி ராக தமிழக அரசு செயல்படாது எனக் கூறியுள்ளார். "சுனாமியை விட கஜா புயல் கொடூரமானது. மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.352 கோடி அளித்துள்ளது. எனினும் மத்திய குழுவின் அறிக் கைக்குப் பின்னர் மனசாட்சியுடன் நிதி ஒதுக்குவர் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை அளித்தி ருப்பதாகவும் இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.