சென்னை: கஜா புயலை அடுத்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்குப் பல் வேறு தரப்பினரும் தோள் கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை 48 கோடியே 65 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் நிவாரண நிதிக்கு அரசு கொறடா, அதிமுக எம்எல்ஏக் கள், சட்டப்பேரவை நியமன உறுப்பினர் ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியமான 86.62 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளனர். தமிழக மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ. 1.10 கோடியை அமைச்சர் ஜெயகுமார் நிவாரண நிதியாக வழங்கினார். இதேபோல் தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் சார்பிலும் நிதி வழங்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் ஹனிபா நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் வழங் கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் முதல்வர் நிவாரண நிதிக்கு 8.53 கோடி ரூபாய் சேர்ந்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரி வித்துள்ளது.
முதல்வர் நிவாரண நிதிக்கு திரண்ட 8 கோடி
1 mins read

