சென்னை: ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக சென்னை யில் மருத்துவப் பணிகள் பாதிக் கப்பட்டன. அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியு றுத்தப்பட்டு வருகிறது எனினும் அரசு இதற்குச் செவிசாய்க்காத நிலையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார் பில் நேற்று மாநிலம் தழுவிய அள வில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் பாலகிருஷ் ணன், 6ஆவது ஊதியக் குழு குறைபாடுகளைக் களைந்து அனைத்து மாநிலங்களுக்கும் இணையாக தமிழகத்தில் பணி புரியும் அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் மற்றும் பணப்படிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு மருத்துவர் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு ரூ.1.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த இழப்பீட்டு தொகைக் காக தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் அரசு மருத்துவர்கள் மாதந்தோறும் 500 ரூபாய் செலுத்தி வருவதாகத் தெரிவித் தார். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் நீடிக்கும் என்றும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

