சென்னை: விரைவில் நடைபெற உள்ள காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் மூலம் தேசிய அளவில் புதிய அணியை உருவாக்கும் வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வியூகம் வகுத்து வருவதாக அரசியல் கவனிப்பாளர் கள் தெரிவித்துள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவுக்கு எதிராகப் பல்வேறு மாநிலக் கட்சிகளை அணி திரட்டி வருகிறார். இந்நிலையில் தேசிய அளவி லான அணியை அமைப்பதில் ஸ்டாலினும் தீவிரம் காட்டி வரு கிறார். இதன் மூலம் அந்த அணி யில் தென்னிந்தியாவைப் பிரதி நிதிக்கும் முக்கிய தலைவராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் 16ஆம் தேதி சென் னையில் நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி உள் ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். சோனியாவுக்கு அழைப்பு விடுக்க ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார். அச்சமயம் சந்திரபாபு நாயுடு ஏற் பாட்டில் அங்கு நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் பங் கேற்கும் ஆலோசனைக் கூட்டத் தில் கலந்துகொள்கிறார். "இதையடுத்து சந்திரபாபுவுக்கு நிகராக ஸ்டாலினும் புதிய அணி அமைப்பதற்கான நடவடிக்கை களில் தீவிரமாக ஈடுபடுவார். சிலை திறப்பு விழாவை இதற்கு பயன்படுத்திக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்," என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருது கின்றனர்.

