பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ஜெயராமன் மரணம்

பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ஜெயராமன் மரணம்

1 mins read
84381fd2-f8c7-4271-b04c-aebefb8a9876
-

சென்னை: தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றிய விவசாயி 'நெல்' ஜெயராமன் புற்றுநோய் பாதிப்பால் நேற்று காலமானார். அவரது மறைவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளனர். மூத்த விவசாயி நம்மாழ்வாரின் இளையர் குழுவில் பயிற்சி பெற்ற வர் ஜெயராமன். அவரது வேண்டு கோளுக்கு இணங்க பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தார். ஆண்டுதோறும் திருத்துறைப் பூண்டியில் தேசிய அளவிலான நெல் திருவிழாவையும் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டு களாக தோல் புற்றுநோயால் அவ ருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

50 வயதாகும் அவருக்கு மனைவியும், 11 வயது மகனும் உள்ளனர். நெல் ஜெயராமன் மறை வுக்கு அரசியல் தலைவர்கள், முக் கியப் பிரமுகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரை தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர்.

விவசாயி 'நெல்' ஜெயராமன். கோப்புப்படம்: ஊடகம்