காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்
தஞ்சை: தமிழகத்துக்குக் காவிரி தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியுள்ளார். காவிரிக் காப்பு நாள் என்று குறிப்பிட்ட ஒரு தினத்தை அறி விக்க வேண்டும் என தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் வலியுறுத்தினார். காவிரி காப்பு நாளன்று குமரி யிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை கட்சி வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று குறிப் பிட்டுள்ள அவர், இந்தப் போராட் டங்கள் டெல்லியே அதிரும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மணியரசன் மேலும் வலியுறுத்தினார். "மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதித் ததைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி தஞ்சையில் கண்டனப் பேரணி நடைபெறும். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்து வோம். "அவற்றுக்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை எனில் மேக தாது பகுதிக்கே சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக உள்ளோம். காவிரியில் நமக்குள்ள உரிமையை மீட்டெ டுக்கும் வரையில் ஓயப்போவது இல்லை," என மணியரசன் மேலும் தெரிவித்தார்.

