மோடியால் கூட்டாட்சித் தத்துவம் தகர்க்கப்படும்: வைகோ

மோடியால் கூட்டாட்சித் தத்துவம் தகர்க்கப்படும்: வைகோ

2 mins read
e6567ea7-0c2f-465b-99b0-0d8f080b926b
-

மதுரை: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வந்தால் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் நாசமாக்கப்படும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறி உள்ளார். மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், மோடி ஆட்சியில் கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை ஆகியன தகர்க் கப்படும் என்றும் குறிப்பிட்டார். "பிரதமர் மோடி ஹிட்லரைப் போல் ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்ப மாட்டார். நாடாளுமன் றத்துக்கு தீ வைத்துவிட்டு கம்யூ னிஸ்ட்கள் மீது பழி போட்டார் ஹிட்லர்.

அதேபோல் ஆட்சி அதிகா ரத்தைத் தக்க வைக்க பிரதமர் மோடியும் எந்தளவுக்கு வேண்டுமா னாலும் செல்வார்," என்றார் வைகோ. மத்தியப் பிரதேச மாநிலத்தேர்த லில் பாஜகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பாது காக்கப்பட வேண்டும் என்றார். "வடமாநிலங்களில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை.

ஆனால், பாஜகவினரோ ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு பணம் கொடுப்பதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்," என்று வைகோ குற்றம்சாட்டினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், அது தமிழக ஆளுநராக இருந் தால் நீதிமன்ற அவமதிப்பு வழக் கின் கீழ் ஆளுநரைத் தண்டிக்க வேண்டும் என்றார். "ஒருவேளை முதல்வர் கடிதம் அனுப்பி இருந்தால் அது தமிழர் களுக்கு செய்த பச்சைத் துரோ கமாகும். இதற்காக அவரும் தண்டிக்கப்பட வேண்டும்," என்றார் வைகோ.