பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: தமிழக நலன் சார்ந்த ஏராளமான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டி உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித் துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் சில மணி நேரங்கள் மட்டும் சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். காவிரி சிக்கல், கஜா புயல் பாதிப்பு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உட்பட தமிழகம் பல சிக்கல்களை எதிர்நோக்கி இருப்ப தாக அறிக்கை ஒன்றில் ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார். "தமிழகத்தின் தலையாயப் பிரச்சினைகள் குறித்து 4 மணி நேரத்தில் எவ்வாறு விவாதங் களை நடத்த முடியும்? கஜா புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களைப் பார்வையிட பிரதமர் இன்னும் வரவில்லை.
"மத்திய அரசு இதுவரை சல்லிக்காசு கூட நிதி உதவி வழங்கவில்லை. ரூபாய் 350 கோடியைப் பேரிடர் நிவாரண நிதியாக மட்டுமே மத்திய அரசு வழங்கி உள்ளது," என்று ராம தாஸ் தெரிவித்துள்ளார்.

