சட்டத் திருத்தம்; ஆதார் தகவல்களைத் திரும்பப் பெறலாம்

சட்டத் திருத்தம்; ஆதார் தகவல்களைத் திரும்பப் பெறலாம்

2 mins read
93ff6449-0a7d-494b-af8b-d5719748fbae
-

புதுடெல்லி: இந்தியர்கள் ஒவ் வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் அட்டை பல் வேறு சேவைகளுக்கும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. 'எனது ஆதார்', 'எனது அடை யாளம்' என்ற முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. மேலும் பான்கார்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் கியாஸ் வினியோகம் உள்பட பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் எண் இணைக்க உத்தர விடப்பட்டது.

பின்னர் கைத்தொலைபேசி சிம் அட்டை வாங்கவும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப் பட்டது. இதையடுத்து ஆதார் அட்டை யில் உள்ள தனிப்பட்ட நபர்களின் ரகசிய தகவல்கள் கசிந்து விடு வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆதார் ரகசிய தகவல்கள் அம்பலமாவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற் பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு அதிரடி உத்தரவுகளைக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.

வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்று கூறப் பட்டது. அதுபோல் சிம் அட்டை களை வாங்கவும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் நீதி மன்றம் அறிவித்தது. ஆதாரை மற்ற சேவைகளுக்குக் கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளைக் கொண்டு வந்தது. அந்தப் பரிந் துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சு அதை பரி சீலித்து அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று திருத்தம் செய்தது.