உச்ச நீதிமன்றம்: மூன்று பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்

உச்ச நீதிமன்றம்: மூன்று பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்

1 mins read

புதுடெல்லி: புதுவை சட்டமன்றத் திற்கு மாநில அரசின் பரிந்துரை யின்றி மத்திய அரசு, நேரடியாக மூன்று நியமன எம்எல்ஏக்களை நியமித்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர், மற்றும் செல்வ கணபதி ஆகியோர் எம்எல்ஏக்களாக நியமிக்கப் பட்டனர். ஆளால் அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்ததால் ஆளுநர் கிரண் பேடி நேரடியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் தொடர்பில் உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடி நியமனம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது. காங்கிரஸ் கட்சி யினர் இந்த விவகாரத்தை உச்ச நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றனர். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து வாத, பிரதி வாத விவாதங்கள் கடந்த மாதம் நிறை வடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், புதுச் சேரியில் மூன்று எம்எல்ஏக் களை மத்திய அரசு நேரடியாக நிய மித்தது செல்லும் என அறிவித் தனர். இதனால் புதுவை காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள் ளது.