உலகளாவிய ஆய்வு: அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது மூன்று தமிழக நகரங்கள்

உலகளாவிய ஆய்வு: அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது மூன்று தமிழக நகரங்கள்

1 mins read

திருச்சி: பொருளியலில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நகரங் களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் சென்னை, திருச்சி, திருப்பூர் ஆகிய மூன்று தமிழக நகரங்களும் இடம்பிடித்து அசத்தி உள்ளன. உலகளவில் 2035ஆம் ஆண் டுக்குள் அதிக அளவில் பொரு ளியல் வளர்ச்சியடைய வாய்ப்புள்ள நகரங்கள் குறித்து 'ஆக்ஸ் ஃபோர்ட் எகனாமிக்ஸ்' என்ற உலகளாவிய பொருளியல் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு விவரம் இப்போது அறிக்கையாக வெளி யிடப்பட்டுள்ளது. இப்போதைய வளர்ச்சி விகிதத் தின் அடிப்படையில் வருகின்ற 2035ம் ஆண்டுக்குள் அதிக பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலும் வெளி யிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களை சூரத், ஆக்ரா, பெங் களூரூ, ஹைதராபாத், நாக்பூர், திருப்பூர், ராஜ்காட், திருச்சி, சென்னை, விஜயவாடா ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரத்தில் முன்னணியில் உள்ள சூரத் நகரம்தான் ஆண் டுக்கு 9.17% வளர்ச்சியுடன் முத லிடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் ஆண்டுக்கு 8.36% வளர்ச்சியுடன் தமிழகத் தைச் சேர்ந்த திருப்பூர் நகரம் ஆறாவது இடத்தைப் பிடித் துள்ளது. தற்போது 4.3% ஆக உள்ள திருப்பூரின் மொத்த உற்பத்தி 2035ல் 17% ஆக வளர்ச்சியடையும் என அந்த ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.