விபத்தை தடுக்க கருவி கண்டுபிடிப்பு; தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள்

விபத்தை தடுக்க கருவி கண்டுபிடிப்பு; தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள்

1 mins read
9c0a5c68-2504-4b1d-b5d0-ffc362bce52c
-

கிருஷ்ணகிரி: பேருந்துகளில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்வதைத் தடுக்கப் புதிய கருவியை வடிவமைத்துள்ள கிருஷ்ணகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் பிரஜனி, சுரேகா ஆகியோர் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றனர் (படம்: ஊடகம்).

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, "பேருந்து படிகளில் நின்றபடி பயணம் செய்வதால் பலர் தவறி கீழே விழுந்து உயிரிழக்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து இயக்கப்படும் போது பயணிகள் படிக்கட்டில் நின்றால் அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். மேலும் படிக்கட்டுகளை ஹைட்ராலிக் முறையில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவியுடன் இணைத் துள்ளதால் படிக்கட்டில் நிற்கும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக பேருந்தின் வேகம் தானாகவே குறையும்.

"இதனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி படிக்கட்டில் இருப்பவர்களை மேலே வரும்படி எச்சரிப்பார். மேலும் அலா ரம் ஒலிப்பதால் சக பயணிகளும் படிக்கட்டில் நிற்பவர்களை மேலே வரும்படி அழைப்பார்கள். இதனால் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்வோர் கீழே விழுந்து இறப்பது தடுக்கப்படும்," என்றனர்.2018-12-08 06:00:00 +0800