அரசு மருத்துவமனைகளில் லஞ்சப் பணம் சிக்கியது

அரசு மருத்துவமனைகளில் லஞ்சப் பணம் சிக்கியது

1 mins read
0ab7a7dd-1c9a-4eb9-80fc-5b2340bb193f
-

சென்னை: எந்த ஓர் ஆகாத காரியமும் ஆகவேண்டும் எனில் பணத்தை நீட்டுங்கள், காரி யத்தை உடனடியாக, கச்சிதமாக முடித்துத் தருகிறோம் என்று கூறி மருத்துவமனைகளில் பணி யாற்றும் கடைநிலை ஊழியர்கள் பலரும் லஞ்சம் வாங்கி வருவது அதிகாரிகளின் சோதனையின் போது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ் சம் வாங்கப்படுவதாக மக்கள் பலராலும் பரவலாகக் குற்றம்சாட் டப்பட்டு வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டின் தொடர்பில் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் தமிழகத்தில் உள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, திருவல்லிக் கேணி கஸ்தூரிபா காந்தி மருத் துவமனை, காஞ்சிபுரம், திருவள் ளூர், திண்டுக்கல், தஞ்சை, மதுரை, கடலூர், கோபிசெட்டி பாளையம், ஓமலூர் ஆகிய 10 அரசு மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடம், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் பகுதி, அறுவை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வைக்கும் இடம், உணவு இருப்பு ஆகி யவை குறித்து சோதனை நடத்தப் பட்டது. அப்போது உள்நோயாளிகள், புறநோயாளிகளிடம் மருத்துவ மனை ஊழியர்கள் லஞ்சம் வாங் கியது தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத் துவமனையின் பிரசவ வார்டு, ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரே பிரிவு, விபத்து பிரிவில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்களிடம் நடத்திய சோதனையில் சுமார் ரூ.15,000 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். படம்: ஊடகம்