சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசி யல் கட்சிகளுக்கிடையே தேர்தல் கூட்டணிக்கான பேரங்களும் துவங்கியுள்ளன. இந்நிலையில் தொகுதி ஒதுக்கீட்டில் எற்படும் பிரச்சினைகள் காரணமாக மூன் றாவது அணி உருவாக அதிக வாய்ப்புள்ளது என அரசியல் கவனிப்பாளர்கள் கருதிகின்றனர். அடுத்தாண்டு மத்தியில் நாடா ளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற் கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகக்கூடும். கடந்த முறை அதிமுக தனித்துப் போட்டியிட்டு தமிழகத் தில் 37 தொகுதிகளைக் கைப் பற்றியது. ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவை அடுத்து திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே இம்முறை தனித்துப் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகத் தெரிகி றது.
தற்போதைய அரசியல் சூழலில் முடிந்தவரை பல்வேறு கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க வேண் டும் என அதிமுக, திமுக ஆகிய இரு கட்சித் தலைமையும் விரும்பு கின்றன. எனினும் எந்தக் கட் சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பதுதான் இரு கட்சிகளின் தலைமைக்கும் தலை வலியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதி களைத் தருவது என அக்கட்சி மேலிடம் முடிவு செயதுள்ளதாகத் தகவல். இதனால் கூட்டணியில் இடம்பெறும் சிறிய கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

