தமிழகத்துடன் மோத விரும்பவில்லை: கர்நாடகா அமைச்சர்

தமிழகத்துடன் மோத விரும்பவில்லை: கர்நாடகா அமைச்சர்

1 mins read

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்துப் பேச நேரம் கேட்டிருப்பதாக கர்நாடகா அமைச் சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக தமிழக முதல்வரிம் இருந்து இன் னும் எந்தப் பதிலும் வரவில்லை என்று சென்னையில் செய்தியாளர் களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். தமிழகத்துடன் எக்காரணத்தை முன்னிட்டும் மோதல் போக்கை கடைபிடிக்க கர்நாடகா அரசு விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், தமிழகமும் கர்நாடகாவும் சகோதர மாநிலங்கள் என்றார். "மேகதாது திட்டம் கர்நாட காவை விட தமிழகத்திற்கே அதிக பயனளிப்பதாக இருக்கும்.

இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம். கர்நாடக மக்க ளுக்கு குடிநீர் தர வேண்டியது எங்கள் கடமை. எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள் ளோம்," என்றார் அமைச்சர் சிவக்குமார். ஒட்டுமொத்த கர்நாடகா மக்க ளும் அணை கட்டுவதற்கு ஆதர வாக இருப்பார்கள் என்றும், கர் நாடகாவில் 6 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அணை கட்டுவதை எதிர்ப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.