குற்றச் செயல்கள் அதிகரிப்பு: கும்பகோணம் மக்கள் அச்சம்

குற்றச் செயல்கள் அதிகரிப்பு: கும்பகோணம் மக்கள் அச்சம்

1 mins read

கும்பகோணம்: கஜா புயலால் தமிழகம் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ள நிலையில் கும்பகோணம் பகுதி மக்களுக்குப் புதிய பிரச்சினை முளைத்துள்ளது. அந்நகரில் பல்வேறு இடங் களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள் பெரும் பாலானவை புயல் வீசியதில் சேதமடைந்துள்ளன. பழுதான கேமராக்களை விரைவாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கும்பகோணத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. "நகரில் தற்போது 260 கண்காணிப்புக் கேமராக்கள் சேதமடைந்துள்ளன. விரைவில் அவை மாற் றப்படும். அடுத்த சில தினங்களுக்குள் நகரில் உள்ள 380 கண்காணிப்புக் கேமராக்களும் வழக்கம் போல் இயங்கத் துவங்கும்," என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.