தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு நாள்களில் 228 விமானங்கள் ரத்து

1 mins read
865e00ac-f6da-49f3-ad7f-7d75706402da
24 விமான நிலையங்களை மூடுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையே நீடித்து வரும் பதற்றம் காரணமாக, இரண்டு நாள்களில் மட்டும் 228 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் காரணமாக இந்தியாவின் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகள் மீது பாகிஸ்தானின் ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடந்த இரு நாள்களில் மட்டும் டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

வரும் மே 15ஆம் தேதி வரை அமிர்தசரஸ், பதிண்டா, புஜ், பூந்தர், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிராசா (ராஜ்கோட்), ஜம்மு, ஜாம்நகர், ஜெய்சால்மர், ஜோத்பூர், காங்க்ரா-ககல், காண்ட்லா, கேஷோத், கிஷன்கர், லே, லூதியானா உள்ளிட்ட 24 விமான நிலையங்களை மூடுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதேபோல், தற்போதுள்ள பதற்றமான சூழலைக் கவனத்தில் கொண்டு, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர், ராஜ்கோட் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் மே 10ஆம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தி வைப்பதாக இண்டிகோ நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்