அயோத்தி: 233 ஆண்டுகள் பழமையான வால்மீகி ராமாயணத்தின் சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதியை அயோத்தி அரும்பொருளகத்திடம் இந்திய அரசு ஒப்படைத்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வாக இது கருதப்படுகிறது.
அப்பிரதியைப் பிரதமர் அரும்பொருளகம், நூலகத்தின் செயற்குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவிடம் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீநிவாச வரகேடி வழங்கினார்.
1849ஆம் ஆண்டைச் சேர்ந்த அந்நூல், தீர்த்தரின் செவ்வியல் உரையுடன் தேவநாகரி எழுத்து வடிவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரதியில் பால காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஐந்து முக்கிய காண்டங்கள் அடங்கியுள்ளன.
முன்னதாக, புதுடெல்லியில் உள்ள இந்திய அதிபர் மாளிகையில் இருந்தது. தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அனைத்துலக ராம கதை அரும்பொருளகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராமாயணப் பாரம்பரியத்திற்கான உலகளாவிய மையமாக இந்த அரும்பொருளகத்தை மேம்படுத்தவும் பொதுமக்களுக்கு அதுகுறித்து காட்சிப்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

