24 காரட் தங்கத் தோசையை சுவைக்க ஆசையா?

24 காரட் தங்கத் தோசையை சுவைக்க ஆசையா?

1 mins read
a2114524-4be8-4b48-9913-2eec3d57d09a
படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவில் 24 காரட் தங்கக் காகிதத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியர்களின் தங்க நகை மோகம் இந்த தங்கத் தோசையைச் சாப்பிடுவதிலும் வெளிப்பட்டு உள்ளதாகவும் இதனைச் சாப்பிட ஹைதராபாத் மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த தங்கத் தோசை விற்பனைக்கு வந்துள்ளது. தோசையை வார்த்தபின் அதில் சுத்தமான 24 காரட் தங்கக் காகிதத்தை ஒட்டி, அது பறந்துவிடாமல் இருக்க அதன் மேல் நெய் ஊற்றுகின்றனர். இதனால்தான் இந்த தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆயினும், இதனைச் சாப்பிட குடும்பம் குடும்பமாக வருகின்றனர். அதிலும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகம். இந்த தங்கத் தோசையுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், பருப்புக ள், நெய், விதவிதமான சட்னிகள், காரப்பொடி, தேங்காய் காரப்பொடி என பலவகை உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன.