தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்பயிற்சிக்கூடத்திலேயே மயங்கி விழுந்து 24 வயது இளையர் உயிரிழப்பு

1 mins read
d6668e54-7e08-47e5-859c-8dceec3a4d1a
உடற்பயிற்சிக்கூடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த விஷால். காணொளிப்படம் -

செகந்தராபாத்: உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 24 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (23-02-2023) மாலை இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், செகந்தராபாத் நகரில் நிகழ்ந்தது.

திடீரென மாரடைப்பு ஏற்பட, தரையில் மயங்கிச் சரிந்த அவர், மூச்சுவிடச் சிரமப்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இச்சம்பவம் முழுவதும் அந்த உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

மாண்ட இளையரின் பெயர் விஷால் என்றும் அவர் 2020ஆம் ஆண்டிலிருந்து காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வந்தார் என்றும் சொல்லப்பட்டது.

இரவு 8 மணியளவில் விஷாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் இறந்துபோனதாக செகந்தராபாத் காவல்துறை தெரிவித்தது.