புதுடெல்லி: மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கரில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கிய ரூ.24,634 கோடி மதிப்பிலான நான்கு ரயில் திட்டங்களுக்கு பொருளியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம். இந்திய ரயில்வேயின் கட்டமைப்பு 894 கிலோ மீட்டர் அதிகரிக்கும்.
அத்துடன், கடந்த ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு ரூ.313.69 கோடியும், குஜராத்துக்கு ரூ.394.28 கோடியும் வழங்க மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ரூ.707.97 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மாநிலங்களுக்கு தீயணைப்புச் சேவை விரிவாக்கம், நவீனமயமாக்கலுக்கு ரூ.903.67 கோடி நிதி உதவி அளிப்பதற்கும் உயர்மட்டக் குழு அனுமதி வழங்கியுள்ளது.