அசாமில் ஏழுமலையான் கோயில் கட்ட 25 ஏக்கர் ஒதுக்கீடு

1 mins read
1cb555bb-6da7-43ba-beb7-f0e31e2fb770
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக அம்மாநில அரசு, ஆந்திராவுக்கு 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. - கோப்புப் படம்: டைம்ஸ் ஆப் இண்டியா

திருமலை: அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, அந்த மாநில அரசு 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

திரு​மலை திருப்​பதி ஏழுமலையான் ஆலய நிர்வாகம், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் கோயில் கட்ட தீர்​மானித்​துள்​ளது. அதற்​காக நிலம் ஒதுக்​கு​மாறு அசாம் மாநில அரசுக்கு ஆலய வாரியம் சார்​பில் கடிதம் எழுதப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்​து, அசாம் அரசு கவுகாத்தியில், முன்னதாக 10.8 ஏக்​கர் நிலத்தை ஒதுக்​கியது. ஆனால், 25 ஏக்​கர் நிலம் இருந்​தால் கோயில் மிக​வும் பிரம்​மாண்​ட​மாக கட்ட முடி​யும் என திருப்​பதி ஏழுமலையான் ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​விடம் அறங்​காவலர் குழுத் தலை​வர் பிஆர் நாயுடு தெரி​வித்​தார்.

அதையடுத்து, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அசாம் மாநில முதல்​வருக்கு அண்மையில், கடிதம் எழுதி இருந்​தார். இதனைத் தொடர்ந்து கோயிலுக்​காக தற்​போது 25 ஏக்​கர் நிலம் ஒதுக்​கி​யுள்​ள​தாக அசாம் மாநில அரசு உறுதி பட திருப்பதி ஏழுமலையான் ஆலய வாரியத்திற்குக் கடிதம் எழுதி உள்​ளது.

விரை​வில் கவுகாத்தி​யில் ஏழு​மலை​யான் கோயில் கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கப்​படும் என பிஆர் நா​யுடு தெரி​வித்​துள்​ளார்​.

குறிப்புச் சொற்கள்