புதுடெல்லி: இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஆகப்பெரிய ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா, தொழில்துறைக்கு புதிய ஆற்றலையும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான மதிப்பையும் வழங்கும் என்றும் புதிய இந்தியா அணுவாயுத அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாது என்றும் திரு மோடி கூறினார்.
“1948ஆம் ஆண்டு இந்திய ராணுவம் ஹைதராபாத்தை விடுவித்து, நாட்டின் பெருமையை மீட்டெடுத்தபோது, சர்தார் வல்லபாய் படேலின் உறுதியான மனவுறுதி வெளிப்பட்டது.
“நாம் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பது 140 கோடி இந்தியர்களிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் இது நிகழ்ந்துள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

