கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே 5,000 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த நிலையங்களில் தங்களின் நெல் மூட்டைகளை விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 3 நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்வதால் 25,000 நெல் மூட்டைகள் லாரி பற்றாக்குறையால் குடோனுக்கு எடுத்து செல்லப்படாமல் ஆங்காங்கே திறந்தவெளியில் இருந்ததால் நனைந்து சேதமடைந்தன.
மேலும் இந்தப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் விரைவாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

