தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே நிமிடத்தில் 25,000 பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு: ரயில்வே அமைச்சர் தகவல்

1 mins read
fd8db3b0-2931-4527-b51c-9e7f2da00cb2
‘ரயில் ஒன்’ செயலி மூலம் கைப்பேசியிலேயே முன்பதிவு, சாதாரண பயணச்சீட்டுகளைப் பயணிகள் வாங்க முடியும் என்றார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு முறையை மேம்படுத்தியுள்ளதாக மத்திய ரயில்வேமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அதன்மூலம், ஒரே நிமிடத்தில் 25 ஆயிரம் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும் என்றார் அவர். இந்திய ரயில்வேயில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், பயணச்சீட்டு எடுக்கும் முறையை முழுமையாக மேம்படுத்தும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளதாகவும் அதன்படி மென்பொருள், பாதுகாப்பு உள்கட்டமைப்பு, புதிய தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் சொன்னார்.

182 கோடி ரூபாய் செலவில் அப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதன்மூலம் தற்போது உள்ள திறனைவிட 4 மடங்கு ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில், அறிமுகம் செய்யப்பட்ட ‘ரயில் ஒன்’ செயலியால் கைப்பேசியிலேயே முன்பதிவு, சாதாரண பயணச்சீட்டுகளைப் பயணிகள் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்