உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

1 mins read
3e2d8ebf-3cbf-493d-b014-9f86f8f5bd38
உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி எஸ்ஐஆர் நடவடிக்கையைத் தொடங்கியது தேர்தல் ஆணையம். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்ஐஆர்) அடுத்து, ஏறக்குறைய 2.89 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்காகும்.

முன்பு 15.44 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 12.55 கோடியாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். அங்கு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி எஸ்ஐஆர் நடவடிக்கையைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்.

தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், 46.23 லட்சம் பேர் இறந்தவர்கள். 2.7 கோடி பேர் வசிப்பிடத்தை மாற்றியவர்கள்.

மேலும், 25.47 லட்சம் பேர் இரட்டைப் பதிவுகளின் அடிப்படையில் நீக்கப்பட்டனர். ஆக அதிகமாக, அம்மாநிலத் தலைவர் லக்னோவில் 12 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

இது லக்னோவின் மொத்த வாக்காளர்களில் 30 விழுக்காடாகும்.

இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைக்க, அதிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரி 6ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்