சந்தைக்குள் விடப்படவுள்ள 300,000 டன் அளவு சீரமைக்கப்பட்ட சர்க்கரை

சந்தைக்குள் விடப்படவுள்ள 300,000 டன் அளவு சீரமைக்கப்பட்ட சர்க்கரை

1 mins read
42326dce-afd6-4703-a054-7d8104469c73
சீரமைக்கப்பட்ட சர்க்கரை (refined sugar). - படம் விக்கிமீடியா காமன்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியச் சந்தைக்குள் மூன்றிலிருந்து மூவறை லட்ச டன் அளவிலான சீரமைக்கப்பட்ட சர்க்கரை (refined sugar) விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சர்க்கரை மேலும் எளிதில் கிடைக்கக்கூடும் என்றும் அதன் விலை குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சீரமைக்கப்பட்ட சர்க்கரையை இந்தியாவின் சர்க்கரை சீரமைப்பு நிறுவனங்கள் சந்தைக்குள் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை பொதுவாக வரி இல்லாத, சீரமைக்கப்படாத சர்க்கரையை இறக்குமதி செய்து அதைச் சீரமைத்து ஏற்றுமதி செய்ய பயன்படுபவை. அண்மையில் அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து அந்தச் சர்க்கரை இப்போது உள்ளூரில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரி இல்லாத, 10 லட்ச டன் அளவு சீரமைக்கப்படாத சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்திய அரசாங்கம் சென்ற வாரம் அனுமதி அளித்தது. அதோடு, ஏற்றுமதிக்காக ஒதுக்கப்பட்ட சீரமைக்கப்பட்டச் சர்க்கரையில் ஓர் அளவை உள்ளூரில் விற்கவும் அனுமதிக்கப்பட்டது.

இதனால், குறைந்தது மூன்று டன் அளவிலான சீரமைக்கப்பட்டச் சர்க்கரை உள்ளூர்ச் சந்தைக்குள் விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் என்று அதிகாரிகளும் இத்துறையின் கவனிப்பாளர்களும் கூறுகின்றனர்.

விநியோகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இறக்குமதி செய்யப்படும் 10 லட்ச டன் அளவிலான சீரமைக்கப்படாத சர்க்கரை அதை ஈடுகட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசர்க்கரைஏற்றுமதிஇறக்குமதிவர்த்தகம்