கழிவுநீர்த்தொட்டி சுத்தம் செய்தபோது தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 38 பேர் உயிரிழப்பு

கழிவுநீர்த்தொட்டி சுத்தம் செய்தபோது தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 38 பேர் உயிரிழப்பு

1 mins read
d14e3bca-ca48-4caf-be45-28261204b32b
மகாராஷ்டிராவில் ஆக அதிகமாக 58 பேர் உயிரிழந்தனர். ஹரியானாவும் (47 பேர்), தமிழ்நாடும் (38 பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. - கோப்புப் படம்: ஒன் இந்தியா

புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியின்போது 38 பேர் உயிரிழந்ததாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் ஹத்வாலே அளித்த பதிலைத் திரு ரவிக்குமார் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தாம் எழுப்பிய கேள்விகளையும் அவற்றுக்கு அமைச்சர் அளித்த பதில்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது இந்தியா முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் 332 பேர் மாண்டுபோயினர் என்றும் இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆக அதிகமாக 58 பேர் உயிரிழந்துவிட்டனர். ஹரியானாவும் (47 பேர்), தமிழ்நாடும் (38 பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழக்கும் கொடுமையை அறவே இல்லாமல் ஒழிப்பதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திரு ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்