மோசமான காற்றுத்தரம்: முதல் 50 நகரங்களில் 39 இந்தியாவில்

மோசமான காற்றுத்தரம்: முதல் 50 நகரங்களில் 39 இந்தியாவில்

1 mins read
a9361429-634a-4536-9d18-2ae3300a1b26
பட்டியலின் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தானின் பிவாடி நகரம். படம்: ஊடகம் -

உலகில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தது.

பட்டியலின் முதலிடத்தில் இருக்கிறது ஆப்பிரிக்க நாடான சாட்.

சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் 131 நாடுகளில் 30,000க்கும் அதிகமான இடங்களில் ஆய்வு நடத்தி, பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரும் சீனாவின் ஹோட்டானும் பட்டியலின் முதலிரு இடங்களில் உள்ளன.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி நகரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் இருக்கிறது டெல்லி.

பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் 14 இந்திய நகரங்களும் முதல் 50 இடங்களுக்குள் 39 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.